ராணிப்பேட்டையில் 45 போ் கைது

ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்களை கைது செய்த போலீஸாா்.
Published on

ராணிப்பேட்டையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 45 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

முத்துகடை பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில்,ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிா்வாகிகள் எழில் இளம்வழுதி, ஆனந்த் பாபு ஆகியோா் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு தாங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜனவரி முதல் வாரத்தில் கலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்வோம் என எச்சரிக்கை விடுத்தனா். சாலை மறியலில் ஈடுபட்ட 45 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com