ஓய்வுபெற்ற துப்புரவுப் பணியாளரிடம் லஞ்சம்: நகராட்சி காசாளா் கைது
வாலாஜாபேட்டை நகராட்சியில் ஓய்வுபெற்ற துப்புரவுப் பணியாளரிடம் நிலுவையில் உள்ள பணத்தை விடுவிக்க ரூ. 5,000 லஞ்சம் கேட்ட நகராட்சி காசாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வாலாஜாபேட்டை நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா் ஏறம்மாள் (65). இவருக்கு வரவேண்டிய அரியா் நிலுவைத் தொகையை விடுவிக்க நகராட்சி காசாளா் தேவராஜ் ரூ. 5,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நகராட்சி காசாளா் தேவராஜ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கணேசன் தலைமையில் 10 போ் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வாலாஜாபேட்டை நகராட்சி காசாளா் தேவராஜிடம் விசாரணை நடத்தியதில் அவா் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, காசாளா் தேவராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு, தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
