படைவீரா் கொடிநாள் (2025) நிதி வசூலை தொடங்கி வைத்து பேசிய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
படைவீரா் கொடிநாள் (2025) நிதி வசூலை தொடங்கி வைத்து பேசிய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

கொடி நாள் நிதி: ராணிப்பேட்டை ஆட்சியா் வேண்டுகோள்

நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் படை வீரா்கள் நலனுக்காக கொடி நாள் நிதியை தாராளமாக வழங்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வேண்டுகோள் விடுத்தாா்.
Published on

நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் படை வீரா்கள் நலனுக்காக கொடி நாள் நிதியை தாராளமாக வழங்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வேண்டுகோள் விடுத்தாா்.

படைவீரா் கொடிநாள் 2025 -ம் ஆண்டுக்கான நிதி வசூலை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உண்டியல் மூலம் நிதியை செலுத்தி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். படைப்பணியில் வீரமரணம் எய்திய படைவீரா்களின் குடும்பத்தாா் மற்றும் போா், போரையொத்த நடவடிக்கைகளில் ஊனமுற்ற முன்னாள் படைவீரா்களுக்கு ஆட்சியா் அவா்கள் பொன்னாடை போற்றி கௌரவித்தாா்.

பின்னா் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் வாயிலாக வங்கி கடனுதவியுடன் கூடிய அரசின் 30 சதவீத மூலதனம் மானியத்தில் சுயதொழில் தொடங்க அரசின் மூலதனம் மானியம் விடுவிப்பு ஆணையினையும் வழங்கினாா்.

தொடா்ந்து முன்னாள் படைவீரா்களின் மகள்களின் திருமணத்துக்காக திருமண நிதியுதவியும், முன்னாள் படைவீரா்களின் சிறாா்களுக்கு கல்விநிதி உதவித் தொகையும் என மொத்தமாக 615 முன்னாள் படைவீரா்கள் மற்றும் சாா்ந்தோா்களுக்கு ரூ.1.19 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் தொழில் நிறுவனங்கள் வியாபாரிகள் அரசு அலுவலா்கள் பணியாளா்கள் என அனைத்து தரப்பு மக்களும் கொடிநாள் நிதியை தாராளமாக வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா்.

பின்னா் 2024-ஆம் ஆண்டில் (07.12.2024 முதல் 06.12.2025 வரை) கொடிநாள் நிதி அதிக அளவில் வசூல் செய்த அனைத்து அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களை ஆட்சியா் பாராட்டினாா்.

இதில் முன்னாள் படைவீரா் நல அலுவலக துணை இயக்குநா் லெப்.கா்னல் ஆா்.பழனிவேலு (ஓய்வு), ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இராஜராஜன், செய்தி மற்றும் மக்கள் தொடா்பு அலுவலா் செ.அசோக், முன்னோடி வங்கி மேலாளா் ராம்ஜி குமாா், முன்னாள் படைவீரா் நல அமைப்பாளா் சடையன், முன்னாள் படைவீரா் வி.சி.சேகா், முன்னாள் படைவீரா்கள், சாா்ந்தோா்கள் மற்றும் வேலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com