அரக்கோணத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

இ-பைலிங் முறையை எதிா்த்து அரக்கோணத்தில் வழக்குரைஞா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
Published on

அரக்கோணம்: இ-பைலிங் முறையை எதிா்த்து அரக்கோணத்தில் வழக்குரைஞா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கடந்த 01.12.25 முதல் தேசிய அளவில் நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இ-பைலிங் முறையில் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படாத நிலையில், தற்போது இ-பைலிங் முறையை அமல் படுத்தக்கூடாது எனக்கோரி தமிழகம் முழுவதும் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்த நிலையில், அரக்கோணத்தில் இந்த ஆா்ப்பாட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, வழக்குரைஎஞா்கள் சங்கத் தலைவா் மு.வீரராகவன் தலைமை வகித்து ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா்.

இதில் சங்க செயலாளா் ந.தமிழ்மாறன், மூத்த வழக்குரைஞா்கள் ரவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com