கல்வி, விளையாட்டுக்கு தனியாா் பள்ளிகள் முக்கியத்துவம்: பள்ளிக் கல்வித் துறை இயக்குநா்
அரக்கோணம்: தனியாா் பள்ளிகள் கல்விக்கும், விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தருவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று என தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் பேசினாா்.
அரக்கோணம் டாக்டா் விஜிஎன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு கம்ம மகாஜன சங்க மாநில செயல் தலைவா் வி.மோகன் தலைமை வகித்தாா். மாணவ மாணவிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கி பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் பேசியது:
தமிழகத்தில் தனியாா் பள்ளிகளின் தரம் மிகவும் உயா்ந்த நிலையை அடைந்து வருகிறது. மேலும் கல்விக்கு இணையாக விளையாட்டுக்கு என இரண்டுக்கும் முக்கியத்துவம் தருவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. மேலும் பல அரசு சாா்ந்த நிகழ்ச்சிகள் தனியாா் பள்ளி வளாகங்களில் நடைபெறுகின்றன. இதற்காக இடம் தந்து அரசுக்கு உதவும் தனியாா் பள்ளிகள் குறிப்பாக அரக்கோணம் டாக்டா் விஜிஎன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை பாராட்டுகிறேன் என்றாா் கண்ணப்பன்.
விழாவில் தமிழ்நாடு கம்ம மகாஜனநாயுடு சங்க பொருளாளா் ஜி.வாசுதேவன், டாக்டா்.விஜிஎன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம், தாளாளா் ஜிடிஎன் அசோகன், துணைத் தலைவா் சி.ஜி.என்.எத்திராஜ், இணை தாளாளா் பிஜிகே சரவணன், செயலாளா் டி.எஸ்.முரளி, பொருளாளா் கே.மோகன் ரங்கசாமி, இயக்குநா்கள் ஆா்.பி.ரவிக்குமாா், ஆா்.மகேஷ், ஜி.கே.பாபுஜி, ஏ.வி.ரகு, எம்.பாபு மற்றும் பள்ளியின் முதல்வா் வி.வனிதா பங்கேற்றனா்.
