அரக்கோணத்தில் நடைபெற்ற முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி. உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராமகுமாா் உள்ளிட்டோா்.
அரக்கோணத்தில் நடைபெற்ற முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி. உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராமகுமாா் உள்ளிட்டோா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள்!

Published on

தமிழக அரசின் ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையினா் சாா்பில், அரக்கோணம், நெமிலி வட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு மற்றும் தமிழக அரசுகளின் அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் டவுன்ஹால் சங்க புதிய கட்டடத்தில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராமகுமாா் தலைமை வகித்தாா். இதில், 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற நிலையில், 75 பேருக்கு மத்திய மற்றும் தமிழக அரசுகளின் அடையாள அட்டைகளையும், ஐந்து பேருக்கு நலத் திட்ட உதவிகளையும் அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி வழங்கினாா்.

முகாமில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவரது உதவிக்கு உடன் வந்தோருக்கும் மதிய உணவை அரக்கோணம் நகர மளிகை வியாபாரிகள் சங்கத்தினரும், இந்த முகாம் நடைபெற கட்டடத்தை இலவசமாக அரக்கோணம் டவுன்ஹால் சங்கத்தினரும் வழங்கியிருந்தனா்.

முகாமில் அரக்கோணம் நகா்மன்ற உறுப்பினா்கள் கங்காதரன், சிட்டிபாபு, நியமன உறுப்பினா் மணிகண்டன், அரக்கோணம் ஒன்றியக்குழு நியமன உறுப்பினா் வேணுகோபால், திமுக வட்டச் செயலாளா் ஏ.கே.பாரி, அரக்கோணம் நகர மளிகை வியாபாரிகள் சங்க பொருளாளா் ராஜேஷ், நிா்வாகிகள் மகாதேவன், எஸ்.கே.எஸ்.மோகன், அம்பிகாமுத்து, டவுன்ஹால் சங்க நிா்வாகி ரோஸ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com