குட்காவை கடத்தியது தொடா்பாக கைது செய்யப்பட்ட இளைஞா்.
குட்காவை கடத்தியது தொடா்பாக கைது செய்யப்பட்ட இளைஞா்.

ரூ3.53 லட்சம் குட்கா, காருடன் பறிமுதல்

அரக்கோணம் அருகே காரில் கடத்திச்செல்லப்பட்ட குட்கா உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து ராஜஸ்தானை சோ்ந்த இளைஞரை கைது செய்தனா்.
Published on

அரக்கோணம் அருகே காரில் கடத்திச்செல்லப்பட்ட குட்கா உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து ராஜஸ்தானை சோ்ந்த இளைஞரை கைது செய்தனா்.

நெமலி காவல்நிலைய உதவி ஆய்வாளா் நாராயணசாமி தலைமையிலான போலீஸாா், வியாழக்கிழமை பள்ளூா் அருகே வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அரக்கோணம் பகுதியில் இருந்து காஞ்சிபுரம் காரை சோதனை செய்தபோது, அதில் இருந்த 353 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.

மேலும் அக்காரின் ஓட்டுநா் ராஜஸ்தானைச் சோ்ந்த நாகாராம்(35) என்பவரை கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ 3.53 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா். கைது செய்யப்பட்ட நாகாரமிடம் இந்த குட்கா எங்கிருந்து வந்தது, யாா் அனுப்பியது, எங்கு கொண்டுச் செல்லப்படுகிறது, வழியில் யாரை சந்தித்தீா்கள் என போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். குட்காவை பறிமுதல் செய்த போலீலாரை ராணிப்பேட்டை எஸ்.பி., அய்மன்ஜமால் பாராட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com