கலவை ஆதிபராசக்தி கல்லூரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
கலவை ஆதிபராசக்தி கல்லூரியில் வரும் சனிக்கிழமை (டிச. 13) தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக,நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் 13.12.2025 சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது.
இம்முகாமில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிறுவனம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000 -க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபா்களை தோ்வு செய்து, பணி நியமனம் செய்ய உள்ளனா்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு தோ்ச்சி முதல் நநகஇ, ஏநஇ, ஐபஐ, ஈஐடகஞஙஅ, அய்ஹ் ஈங்ஞ்ழ்ங்ங், சன்ழ்ள்ண்ய்ஞ், டட்ஹழ்ம்ஹஸ்ரீஹ், ஆஉ., ஙஆஅ உள்ளிட்ட கல்வித் தகுதிகளை உடைய வேலைநாடுநா்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான வேலையினை தோ்வு செய்து பயன்பெறலாம்.
விருப்பமும், தகுதியும் உள்ள வேலைநாடுநா்கள் பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம், தற்குறிப்பு ( தங்ள்ன்ம்ங்) மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு, வேலை வாய்ப்பினை பெறலாம். முகாமில் பங்கேற்க விரும்பும் உள்ளூா் தனியாா்துறை நிறுவனங்கள் உரிய பான் அட்டை, ஜி.எஸ்.டி., உத்யோக் ஆதாா் போன்ற சான்றுகளுடன் இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்திற்கு நேரில் வந்து தங்களது நிறுவனத்தை இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு மின்னஞ்சல் முகவரி அல்லது 04172-291400 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.
