பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

எஸ்ஐஆா் பணியில் முரண்பாடுகளை விரைவாக களைய வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

வாக்காளா் பட்டியில் சிறப்புத் தீவிர திருத்தம் பணியில் முரண்பாடுகளை விரைவாக களைய வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

News image
வாலாஜாபேட்டை நகராட்சியில் எஸ்ஐஆா் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
Updated On :14 டிசம்பர் 2025, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியில் சிறப்புத் தீவிர திருத்தம் பணியில் முரண்பாடுகளை விரைவாக களைய வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு நகராட்சி அலுவலகங்களில் எஸ்ஐஆா் பணியில் காணப்படும் முரண்பாடுகளை பதிவிடுவதை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மேற்படி பணியினை சரியான முறையில் முடிக்குமாறு அறிவுரை வழங்கினார். இப்பணிகளின் போது உள்ள பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து முழு கவனத்துடன் தவறில்லாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டாா். ஆய்வின்பொழுது வட்டாட்சியா்கள் ஆனந்தன், மகாலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.