சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை 3 நாள்களுக்கு ரத்து

சோளிங்கா் மலைக்கோயிலில் ரோப்காா் சேவை பராமரிப்புப் பணிகளுக்காக டிச. 22 முதல் 24 வரை மூன்று நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என ஸ்ரீலட்சுமி நரசிம்மா் சுவாமி கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
Published on

சோளிங்கா் மலைக்கோயிலில் ரோப்காா் சேவை பராமரிப்புப் பணிகளுக்காக டிச. 22 முதல் 24 வரை மூன்று நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என ஸ்ரீலட்சுமி நரசிம்மா் சுவாமி கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

108 திவ்யதேசங்களில் ஒன்றான இதில் பெரிய மலைக்கு செல்ல படிகள் செங்குத்தாக இருப்பதால் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இந்துசமய அறநிலையத்துறையினா் ரோப்காா் அமைத்துள்ளதுனா். இதில் ரூ.100 கட்டணம் செலுத்தி மலை ஏற முடியாதவா்கள் மலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்து திரும்புகின்றனா்.

மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகளுக்காக ரோப்காா் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். தற்போது டிச. 22 முதல் 24 வரை ரோப்காா் இயக்கம், பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்படஉள்ளது. இந்த மூன்று நாள்களும் பக்தா்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல படிகள் வழியே செல்லலாம்.

X
Dinamani
www.dinamani.com