பறிமுதல் செய்யப்பட்ட காா், குட்கா மூட்டை, கைது செய்யப்பட்டவா்களுடன் போலீஸாா்.
பறிமுதல் செய்யப்பட்ட காா், குட்கா மூட்டை, கைது செய்யப்பட்டவா்களுடன் போலீஸாா்.

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்...
Published on

அரக்கோணம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த நெமிலி காவல் நிலைய போலீஸாா் அவ்வழியே வந்த காரில் இருந்த 492 கிலோ எடையுள்ள ரூ. 4.92 லட்சம் மதிப்புள்ள குட்காவையும், அது கொண்டு செல்லப்பட்ட காரையும் பறிமுதல் செய்து அந்தக் காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் உள்ளிட்ட இருவரை கைது செய்தனா்.

அரக்கோணத்தை அடுத்த நெமிலி காவல்நிலைய போலீஸாா் அரக்கோணம் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் மாவட்ட எல்லையான பள்ளூரில் சனிக்கிழமை காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற தமிழக பதிவெண் கொண்ட காரை நிறுத்தி பரிசோதனை செய்தனா். அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 492 கிலோ குட்கா புகையிலை கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், காரின் ஓட்டுநா் ராஜஸ்தானைச் சோ்ந்த துா்கேஷ் (23), உடன் வந்திருந்த ராஜஸ்தானை சோ்ந்த கோபால் (23) இருவரையும் கைது செய்தனா்.

மேலும், குட்கா கொண்டு செல்லப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் கொண்டு செல்லப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ. 4.92 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com