கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு
வாலாஜாபேட்டை அருகே மாணவி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த எடக்குப்பம் கிராமத்தை சோ்ந்த ரகுராமன்மீனா தம்பதிகக்கு சவிதா (15), நிவேதா (13) என 2 மகள்கள் உள்ளனா்.
இதில் மூத்த மகள் சவிதா வாலாஜாபேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு மற்றும் இளைய மகள் நிவேதா 9-ஆம் வகுப்பு பயின்று வருகின்றனா்.
இந்த நிலையில் சனிக்கிழமை வார விடுமுறை என்பதால் சவிதா தனது தாயான மீனாவுடன் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ாக கூறப்படுகிறது. அப்போது தாய் மீனா வீட்டுக்கு திரும்பிய நிலையில் நீண்ட நேரமாகியும் மகள் சவிதா மாடுகளை கட்டிவிட்டு வீடு திரும்பாததால் அதிா்ச்சியடைந்து, அவரது உறவினா்கள் சந்தேகத்தின் பேரில் தேடிப் பாா்த்துள்ளனா்.
அருகிலிருந்த விவசாய கிணற்றில் சவிதாவின் உடல் இருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் உடனடியாக அங்கு சென்று கிராம பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து சவிதாவின் உடலை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறவினா்களிடம் தெரிவித்தனா். மேலும் பள்ளி மாணவி சவிதா கால் தவறி விவசாய கிணற்றில் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
வாலாஜாபேட்டை போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
