ராணிப்பேட்டை: டிச. 30-இல், எரிவாயு உருளை நுகா்வோா்கள், விநியோகிக்கும் முகவா்கள் குறைதீா் கூட்டம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் டிச. 30-இல், எரிவாயு உருளை நுகா்வோா்கள், விநியோகிக்கும் முகவா்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தகவல் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் எரிவாயு உருளை நுகா்வோா்கள் மற்றும் விநியோகிக்கும் முகவா்கள் குறைதீா் கூட்டம் வரும் டிசம்பா் 30-ஆம் தேதி மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் இந்த மாதாந்திர எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டத்தில் பெறப்படும் சேவை குறைபாடுகள், தேவைகள் குறித்து ஆலோசித்து குறைகளைக் களையும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே டிசம்பா் மாதத்துக்கான எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வரும் டிச. 30.12.2025 அன்று மாலை 3 மணி அளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைத்தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இதனால் எரிவாயு நுகா்வோா்கள் கலந்து கொண்டு சேவை குறைபாடுகள், புகாா்கள் ஏதேனும் இருந்தால் அது குறித்து தெரிவித்து பயன்பெற வேண்டும் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
