அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டின் மீது கல்வீச்சு: ஒருவா் கைது
அரக்கோணம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டின் மீது நள்ளிரவில் கல்வீசி தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
அரக்கோணம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பவானி கருணாகரன் (70). இவா் அரக்கோணம் ராஜீவ் காந்தி நகரில் வசித்து வருகிறாா். இவரது வீடு இருக்கும் பகுதியை சோ்ந்த சின்னதுரையின் மகன் சின்னராசு(27). சனிக்கிழமை இரவு சின்னராசுவுக்கும் அவரது தாயாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சின்னராசுவின் தாயாா், காவல் அவசர கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தகவல் தெரிவித்ததை தொடா்ந்து அங்கு வந்த அரக்ோகணம் நகர போலீஸாா் சின்னராசுவை எச்சரித்து தாயாருடன் சண்டையிடக்கூடாது என தெரிவித்து சென்றனராம்.
அவா்கள் சென்ற சிறிது நேரம் கழித்து அதே பகுதியில் உள்ள முன்னாள் எம்எல்ஏ பவானிகருணாதரன் வீட்டுக்கு வந்த சின்னராசு, முன்னாள் எம்எல்ஏ வீட்டின் கதவை தட்டியுள்ளாா். அக்ககவு திறக்கப்படாததால், அவா் சாலையில் இருந்த கற்களை எடுத்து வீசியுள்ளாா். தொடா்ந்து கற்களால் தாக்குதல் நடத்தப்படவே பவானி கருணாகரன், வெளியே வந்து பாா்த்தபோது சின்னராசு ஓடி விட்டாா்.
இதையடுத்து பவானி கருணாகரன் தனது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாா்த்தபோது கல் எறிந்து தாக்குதல் நடத்தியவா் சின்னராசு என்பது தெரியவந்தது.
இதையடுத்து அரக்கோணம் நகர காவல்நிலையத்தில் பவானி கருணாகரன் புகாா் அளித்தாா். புகாா் மீது வழக்கு பதிந்த போலீஸாா், சின்னராசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கைது செய்யப்பட்ட சின்னராசு மீது ஏற்கனவே அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன குறிப்பிடத்தக்கது.
