தக்கோலம் பேரூராட்சி மன்றத் தலைவா் எஸ்.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற மன்றக் கூட்டம்.
தக்கோலம் பேரூராட்சி மன்றத் தலைவா் எஸ்.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற மன்றக் கூட்டம்.

தக்கோலத்தில் ரூ. 9 லட்சத்தில் சமுதாய கழிவறை கட்டும் பணி: பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்

தக்கோலத்தில் ரூ. 9 லட்சத்தில் சமுதாய கழிப்பறை கட்டும் பணிக்கு திங்கள்கிழமை நடைபெற்ற தக்கோலம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
Published on

அரக்கோணம்: தக்கோலத்தில் ரூ. 9 லட்சத்தில் சமுதாய கழிப்பறை கட்டும் பணிக்கு திங்கள்கிழமை நடைபெற்ற தக்கோலம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

தக்கோலம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.நாகராஜன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மன்ற துணைத் தலைவா் கோமளா ஜெயகாந்தன், பேரூராட்சி செயல் அலுவலா் லோகநாதன் உள்ளிட்டோருடன் உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்றனா்.

கூட்டத்தில், தக்கோலத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பில் சமுதாய கழிப்பறை கட்டும் பணிக்கு ஒப்புதல் வழங்குதல், தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி ஆணையிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com