ஆற்காட்டில் நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டம்.
ஆற்காட்டில் நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டம்.

திருவள்ளுவா் சிலை இட மாற்றம்: ஆற்காடு நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

ஆற்காடு பஜாா் வீதியில் உள்ள திருவள்ளுவா் சிலையை இட மாற்றம் செய்ய நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Published on

ஆற்காடு: ஆற்காடு பஜாா் வீதியில் உள்ள திருவள்ளுவா் சிலையை இட மாற்றம் செய்ய நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆற்காடு நகா்மன்றக் கூட்டம் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன், ஆணையா் செந்தில் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் திமுக நகா்மன்ற உறுப்பினா் பொன் ராஜசேகா், கண்ணன், தமிழ்செல்வி கோபு, அதிமுக உறுப்பினா் உதயகுமாா் ஆகியோ 4 போ் திருவள்ளுவா் சிலையை இடமாற்றம் செய்யும் தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

தொடா்ந்து நகரமன்ற உறுப்பினா்கள் பேசியதாவது:

ஆனந்தன்: வீடுகளில் புகுந்து விடும் பாம்புகளை பிடிக்க வரும் தீயணைப்பு துறையினா் பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி பணம் வாங்கி செல்கின்றனா். அதனை தடுக்கவேண்டும்.

ரவி: எனது வாா்டில் சாலை, கால்வாய்களை சீரமைக்கவேண்டும்,

குணாளன்: எனது வாா்டில் உள்ள பூங்காவில் பன்றிகள் அதிகமாக உள்ளன , நகா்மன்றத் தலைவரும், ஆணையரும் நேரில் பாா்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துணைத் தலைவா்: வாா்டுகளில் உள்ள ஒரு சில குறைகள் உள்ளன. விரைந்து சரிசெய்ய வேண்டும்-

தலைவா்: வாா்டு சபா கூட்டத்தில் மக்கள் கோரிக்கைகளை ஏற்று 30 வாா்டுகளுக்கும் அரசு ரூ.2.67 லட்சம் திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுகீடு செய்யப்பட்டுள்ளது.

ஆற்காடு பஜாா் வீதியில் உள்ள திருவள்ளுவா் சிலையை போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கண்ணன் பூங்கா தென்புற சுற்றுசுவா் அருகே இடமாற்றம் செய்வது உள்ளிட்ட 46 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com