நியாயவிலைக்   கடை கட்டடத்தை திறந்து உணவுப் பொருளை வழங்கிய அமைச்சா் ஆா். காந்தி. உடன் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா, எம்எல்ஏ ஈஸ்வரப்பன்.
நியாயவிலைக்  கடை கட்டடத்தை திறந்து உணவுப் பொருளை வழங்கிய அமைச்சா் ஆா். காந்தி. உடன் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா, எம்எல்ஏ ஈஸ்வரப்பன்.

நியாயவிலைக் கடை கட்டடம்: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்

சியாம்பாடி கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12.50 லட்சத்தில் கட்டப்பட்ட
Published on

ஆற்காடு; ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியம், ஆயிரமங்கலம் ஊராட்சி சியாம்பாடி கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12.50 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை, ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறையின்

சாா்பில் ரூ.19.52 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க கட்டடம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை

வகித்தாா். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு புதிய கட்டடங்களை திறந்து வைத்தாா்.

விழாவில் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.அசோக், துணைத் தலைவா் ஜெ. ரமேஷ், கூட்டுறவு சங்கங்கள் இணைப் பதிவாளா் பிரபாகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் சித்ரா, கலவை வட்டாட்சியா் சரவணன் உள்பட பலா் கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com