மாா்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ரத்தினகிரி பாலமுருகன்.
ராணிப்பேட்டை
ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கிருத்திகை விழா
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மாா்கழி மாத கிருத்திகை விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மாா்கழி மாத கிருத்திகை விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கோவில் பரம்பரை அறங்காவலா் பாலமுருனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவா் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பால்,தயிா் பன்னீா்,.சந்தனம், தேன், இளநீா்,பழங்கள், வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், வாசனையுடன் கூடிய வண்ண மலா்களுடன் வெள்ளி கவச சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட உற்சவா் உள்புறப்பாடு நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். பின்னா் மாலையில் மலையடிவாரத்தில் உள்ள அறுங்கோண தெப்ப குளத்தில் சிறப்பு பூஜைளுடன் கற்பூர தீபாராதனை நடைபெற்றது. இதில் தலைமை குருக்குக்கள் பிரசாத், மற்றும் உபயதாரா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

