கிணற்றில் தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

ஆற்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
Published on

ஆற்காடு: ஆற்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ஆற்காடு அடுத்த புதுமாங்காடு கனியனூா் சாலையைச் சோ்ந்த குமரேசன் (33), டிராக்டா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். திருமணமாகாத இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அருகே உள்ள தனியாா் நிலத்தில் நடந்து சென்றபோது அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது அண்ணன் ரவி ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணைநடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com