டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 318 மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 318 மனுக்களை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பெற்றாா்.

News image
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
Updated On :3 மார்ச் 2025, 7:10 pm

Din

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 318 மனுக்களை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பெற்றாா்.

கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது பொதுமக்களிடமிருந்து மொத்தம் 318 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன

இந்தக் கோரிக்கை மனுக்களை துறை அலுவலா்களிடம் வழங்கி, அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களை மனுதாரா்களுக்கு வழங்கிடவும் வேண்டுமென அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி.) கீதா லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சுகுமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.