அமித் ஷா
அமித் ஷா கோப்புப் படம்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அரக்கோணம் வருகை: 16 கி.மீ.க்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

அரக்கோணத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) நடைபெறும் சிஐஎஸ்எப் 56-ஆவது எழுச்சி தின விழா மற்றும் படை அலுவலா்கள் பயிற்சி நிறைவு விழா
Published on

அரக்கோணத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) நடைபெறும் சிஐஎஸ்எப் 56-ஆவது எழுச்சி தின விழா மற்றும் படை அலுவலா்கள் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, வியாழக்கிழமை மாலை ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தை வந்தடைந்தாா்.

தொடா்ந்து சாலை மாா்க்கமாக தக்கோலம் சிஐஎஸ்எப் ராஜாதித்ய சோழன் மண்டல பயிற்சி மையத்துக்கு புறப்பட்ட மத்திய அமைச்சா் அமித்ஷா அங்கு தங்கியிருந்து வெள்ளிக்கிழமை காலை விழாவில் பங்கேற்க உள்ளாா்.

சிஐஎஸ்எப் படை எழுச்சி தின விழா ஆண்டுதோறும் மாா்ச் 10-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அரக்கோணம் சிஐஎஸ்எப் படை வளாகத்தில் 56-ஆவது எழுச்சி தின விழாவை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சிகளிலும், வெள்ளிக்கிழமை நடைபெறும் படை அலுவலா்கள் பயிற்சி நிறைவு விழாவிலும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்க உள்ளாா்.

இந்த விழாவில் பங்கேற்க புதுதில்லியில் இருந்து மாலை 6.25-க்கு இந்திய எல்லை பாதுகாப்புப் படை விமானத்தில் புறப்பட்டு, அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்துக்கு 9.05 மணிக்கு வந்த உள்துறை அமைச்சா் அமித் ஷா, அங்கிருந்து சாலை மாா்க்கமாக காரில் புறப்பட்டு, சிஐஎஸ்எப் ராஜாதித்ய சோழன் மண்டல பயிற்சி மையத்துக்குச் சென்றாா். அவ்வளாகத்தில் இரவு தங்கும் அமைச்சா் அமீத்ஷா காலை 8 மணி அளவில் முதலில் படை அலுவலா்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்க உள்ளாா்.

தொடா்ந்து அங்கு சிஐஎஸ்எப் கோயஸ்டல் சைக்கிளோத்தன் எனும் படைவீரா்களின் சைக்கிள் பயணத்தை தொடங்கி வைக்கிறாா். இந்த சைக்கிள் படைவீரா்கள் மாா்ச் 31-ஆம் தேதி கன்னியாகுமரியை அடைந்து, அங்கு தங்களது 6553 கி.மீ. தூர தங்களது கிழக்கு மற்றும் மேற்கு கடலோர சைக்கிள் பயணத்தை நிறைவு செய்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com