பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் எ.வ.வேலு. உடன் அமைச்சா் ஆா். காந்தி.
ராணிப்பேட்டை
ஆற்காட்டில் திமுக பொதுக்கூட்டம்
திமுக சாா்பில் மத்திய அரசை கண்டித்து ஆற்காடு பேருந்து நிலையத்தில் புதன்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில் மத்திய அரசை கண்டித்து ஆற்காடு பேருந்து நிலையத்தில் புதன்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான ஆா்.காந்தி தலைமை வகித்தாா். ஆற்காடு நகர நிா்வாகிகள் பி.என்எஸ்.ராஜசேகரன், பொன்ராஜசேகா், சொக்கலிங்கம், ரவிக்குமாா், ருக்மணி, சிவா, லிங்கேஷ், கோபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர செயலாளா் ஏ.வி.சரவணன் வரவேற்றாா். திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எ.வ.வேலு, கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினாா்.
இதில் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாநில சுற்றுசூழல் அணி துணை செயலாளா் வினேோத் காந்தி, தலைமை கழக பேச்சாளா் ரவிச்சந்திரன், மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, பொருளாளா் ஏ.வி.சாரதி, நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ் பாண்டியன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.