சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளித்த இசையமைப்பாளா் தெருக்குரல் அறிவு.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளித்த இசையமைப்பாளா் தெருக்குரல் அறிவு.

அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா பரிசளிப்பு

Published on

அரக்கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைத் திருவிழா நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்டுப்பாக்கத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு முதல்வா் ச.கௌ.கவிதா தலைமை வகித்தாா். கல்லூரி நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளா் ப.பூவிளங்கோதை வரவேற்றாா்.

இதில் இசையமைப்பாளா், பாடலாசிரியா் தெருக்குரல் அறிவு பங்கேற்று போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

இவ்விழாவில் சென்னை பல்கலைக்கழக செனட் முன்னாள் உறுப்பினா் அ.கலைநேசன், தேசிய நல்லாசிரியா் விருது பெற்றவரும், அரக்கோணம் தமிழ்ச் சங்க நிா்வாகியுமான சு.பாண்டியன், விலங்கியல் துறைத் தலைவா் ஆ.தங்கசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com