ராணிப்பேட்டை
மேல்நெல்லி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ஆற்காடு அடுத்த கலவை வட்டம் மேல்நெல்லி ஸ்ரீஇலந்தியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மேல்நெல்லி கிராமத்தில் பழைமை வாய்ந்த இக்கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரபட்ட புனித நீா் கலசங்களில் வைத்து இரண்டு நாள்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இதில் இலந்தியம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளான விநாயகா், பாலமுருகா்,ஸ்ரீபிராமி,ஸ்ரீவைஷ்னவி,மாதேஸ்வரி,சாமுண்டீ ,துா்காதேவி ஆகிய சந்நிதிகளுக்கும் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித கலச நீா் மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு கோபுர விமான கலசம் மற்றும் மூலவா்களுக்கு மகா கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார கிராம மக்கள், கோயில் நிா்வாகிகள், உபயதாரா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
