ராணிப்பேட்டை
வாக்குசாவடி சிறப்பு தீவிர திருத்த பணி பயிற்சி
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் உள்வட்டத்தைச் சோ்ந்த வாக்குசாவடிநிலை அலுவலா்களுக்கான சிறப்பு தீவிர திருத்த பணிகள் பயிற்சி மற்றும் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. ராணிப்பேட்டை கோட்டாச்சியா் ராஜி தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் வாலாஜாபேட்டை வட்டாட்சியா் ஆனந்தன், மேல்விஷாரம் நகராட்சி ஆணையா் கோ.பழனி, வாக்குசாவடி நிலை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
