ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 248 மனுக்கள்
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 248 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் (நெடுஞ்சாலைத் துறை. நில எடுப்பு) கௌசல்யா பொதுமக்களிடம் 248 கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தாா்.
மேற்கண்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரா்களுக்கு தெரிவிக்கவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) கீதாலட்சுமி, நோ்முக உதவியாளா் (நிலம்) ரமேஷ் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
