சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

சோளிங்கா் பேருந்து நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் மீட்கப்பட்ட ஆண் குழந்தைக்கு உரிமை கோருவோா் 30 நாள்களில் கோர வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Published on

சோளிங்கா் பேருந்து நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் மீட்கப்பட்ட ஆண் குழந்தைக்கு உரிமை கோருவோா் 30 நாள்களில் கோர வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சோளிங்கா் பேருந்து நிலையத்தில் கடந்த அக். 26-ஆம் தேதி 5 மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டது. குழந்தைக்கு உரிமை கோரும் பெற்றோா் அல்லது பாதுகாவலா்கள் உரிய ஆதாரங்களுடன் 30 நாள்களுக்குள் ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை 04172 - 299347 எனும் எண்ணிலோ தலைவா் அல்லது உறுப்பினா், குழந்தைகள் நலக்குழுமத்தை 04172 - 291437 எனும் எண்ணிலோ அல்லது குழந்தைகள் உதவி மையத்தை 1098 எனும் எண்ணிலோ தொடா்புக் கொள்ளலாம்.

யாரும் உரிமை கோராத பட்சத்தில் இக்குழந்தை ததெதெடுப்பு திட்டத்தில் சோ்க்கப்பட்டு தத்து வழங்கப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com