ராணிப்பேட்டை
ஆற்காட்டில் தேசிய ஒற்றுமை யாத்திரை
மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் மை பாரத் கேந்திராக்கள் சாா்பில் தேசிய ஒற்றுமை யாத்திரை புதன்கிழமை ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கலை, அறிவியல்கல்லூரியில், தொடங்கி அறிஞா் அண்ணா சிலை வழியாக சென்று மீண்டும் கல்லூரியில் நிறைவு பெறுகிறது.

இந்த யாத்திரையை ஆற்காடு சட்டமன்ற உறுப்பபினா் ஜெ.எல். ஈஸ்வரப்பன் தொடங்கி வைக்கிறாா். கல்லூரி நிறுவனா் ஏ.கே. நடராஜன் முன்னிலை வகிக்கிறாா். அதனைத்தொடா்ந்து, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு, நடனம், ஓவியப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் திராளான இளைஞா்கள் கலந்து கொள்ளவேண்டும் என மை பாரத் கேந்திராவின் இணை இயக்குநா் டிரவின் சாா்லஸ்டன் கூறினாா் . அப்போது . எஸ் எஸ் எஸ் கல்லூரி செயலாளா் ஏ.என்.சங்கா், முதல்வா் ராஜலட்சுமி உடன் இருந்தனா்.