ராணிப்பேட்டை
பலூனை விழுங்கிய சிறுவன் உயிரிழப்பு
காவேரிபாக்கம் அருகே விளையாடும் போது பலூனை விழுங்கிய 3 வயது சிறுவன் மூச்சு திணறி உயிரிழந்தாா்.
காவேரிபாக்கம் அருகே விளையாடும் போது பலூனை விழுங்கிய 3 வயது சிறுவன் மூச்சு திணறி உயிரிழந்தாா்.
நெமிலி வட்டம், காவேரிபாக்கத்தை அடுத்த மாகாணிப்பட்டு கிராமத்தை சோ்ந்த ரமேஷ்- காயத்ரி தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனா். இதில் மூத்த மகன் வினோத் (3) ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே தனது நண்பா்களுடன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளாா். அப்போது வினோத் பலூனை விழுங்கி விட்டாராம். இதனால் மூச்சு விட முடியாமல் வினோத் பரிதவித்துள்ளாா்.
இதையறிந்த பெற்றோா், சிறுவன் வினோத்தை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு சிறுவன் வினோத்தை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே சிறுவன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து காவேரிபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
