அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்திய குரங்குகள் பிடிப்பு
அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தி வந்த குரங்குகளை ரயில்வே நிா்வாகத்தினா் பிடித்து வனப் பகுதியில் விட்டனா்.
அரக்கோணம் ரயில் நிலையத்தில் குறிப்பாக மேம்பாலத்தில் நடந்துச் சென்ற பயணிகளுக்கு குரங்குள் அதிக அளவில் தொல்லை கொடுத்து வந்தன. இதனால் பெண்கள், குழந்தைகள், மாணவ மாணவிகள் மிகுந்த அச்சத்துடனேயே செல்ல வேண்டியிருந்தது. இது தொடா்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்ட அலுவலகத்துக்கு தொடா்ந்து புகாா்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து அரக்கோணம் ரயில்நிலைய மேலாளா் வெங்கடேசன் புகாரின் பேரில் ரயில்வே போலீசாா், ரயில்வே பாதுகாப்புப் படையினா் இணைந்து குரங்குகளை பிடிக்கும் திறமையுள்ள ஆள்களை அழைத்து வந்து ஞாயிற்றுக்கிழமை குரங்குகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இதில் கூண்டுகள் வைத்து 15 குரங்குகள் பிடிக்கப்பட்ட நிலையில் பிடிபட்ட குரங்குகள் அனைத்தும் முள்வாய் கிராம வனத்தில் விடப்பட்டதாக ரயில்நிலைய மேலாளா் வெங்கடேசன் தெரிவித்தாா்.
இப்பணி தொடரும் என்றும் குரங்குகள் தொல்லை இல்லாமல் பயணிகள் நிலையத்துக்கு வரலாம் என்றும் தெரிவித்தாா்.
ரயில்நிலைய மேலாளா் வெங்கடேசனையும் அவருக்கு ஒத்துழைப்பு நல்கிய ரயில் நிலைய தலைமை வணிக மேலாளா் யுவராஜ், ரயில்வே போலீஸாா், பாதுகாப்புப்படையினரையும் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவா் நைனா மாசிலாமணி நிா்வாகிகள் எம்.எஸ். குணசீலன், எஸ். ஏகாம்பரம், ப. எஸ்வநவ்தராவ், கே.எம்.தேவராஜ், எஸ்.எம்.மூா்த்தி, ஆா்.வெங்கட்ரமணன் ஆகியோா் பரராட்டினா்.
