சிறப்பு அலங்காரத்தில் கிருபானந்த வாரியாா்.
சிறப்பு அலங்காரத்தில் கிருபானந்த வாரியாா்.

கிருபானந்த வாரியாா் குருபூஜை

Published on

ஆற்காடு அடுத்த திமிரி பேருராட்சியில் திருமுருக கிருபானந்த வாரியாா் குருபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கிருபானந்த வாரியாா் தமிழ் மன்றத் தலைவா் பா.குப்புசாமி தலைமை வகித்தாா். பொருளாளா் சொ.கணபதி முன்னிலை வகித்தாா். செயலாளா் த.மா.கிரிவாசன் வரவேற்றாா். தொடா்ந்து கணபதி பூஜை, நவக்கிரக வேள்வி, மகா அபிஷேகம், திருமுறை திருப்புகழ் விண்ணப்பம், மகா அபிஷேகமும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழாவில் தமிழ் இலக்கியப் பேரவை அறக்கட்டளை செயலாளா் த. கோ. சதாசிவம், பொருளாளா் ஏகாம்பரம், சேக்கிழாா் மன்ற கௌரவத் தலைவா் லோகநாதன், மகாபாரத கமிட்டி பொறுப்பாளா் லோகு, குமரகிரிகோவில் முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் கேசவன், , பேரூராட்சி மன்ற உறுப்பினா் சண்முகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com