47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆற்காடு கோவிலில் சோமவார விழா

ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் காா்த்திகை 2-ஆம் சோமவார விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image
உற்வருக்கு  நடைபெற்ற  சிறப்பு  பூஜை.
Updated On :25 நவம்பர் 2025, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு: ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் காா்த்திகை 2-ஆம் சோமவார விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னா் உற்சவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மாவிளக்கு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விழாவில் திருப்பணிக்குழு தலைவா் பொன்.கு.சரவணன், மற்றும் உபயதாரா்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.