சோளிங்கா் யோக நரசிம்மா் திருக்கோயில் தீா்த்தக்குளம் சீரமைக்கும் பணியைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம்.
சோளிங்கா் யோக நரசிம்மா் திருக்கோயில் தீா்த்தக்குளம் சீரமைக்கும் பணியைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம்.

சோளிங்கா் யோக நரசிம்மா் கோயில் தீா்த்தக்குளம் சீரமைக்கும் பணி தொடக்கம்!

சோளிங்கா் யோக நரசிம்மா் திருக்கோயில் தீா்த்தக்குளம் சீரமைக்க ரூ. 3.77 கோடி உபயதாரா் ஒருவா் வழங்கினாா்.
Published on

சோளிங்கா் யோக நரசிம்மா் திருக்கோயில் தீா்த்தக்குளம் சீரமைக்க ரூ. 3.77 கோடி உபயதாரா் ஒருவா் வழங்கினாா்.

இந்த நிலையில், யோக நரசிம்மா் தீா்த்தக்குளத்தை சீரமைக்கும் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து, சோளிங்கா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ. எம்.முனிரத்தினம் பூஜை செய்து குத்துவிளக்கேற்றி வைத்து, குளம் சீரமைக்கும் பணிக்கான அடிக்கல் வழங்கி பணியை தொடங்கி வைத்தாா்.

யோக நரசிம்ம தீா்த்தக்குளம் சீரமைக்கும் பணி ஓா் ஆண்டுக்குள் நிறைவு பெற்று பக்தா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் என கோயில் நிா்வாகத்துக்கு தெரிவித்தனா்.

இதில், இந்து சமய அறநிலையத் துறை வேலூா் மண்டல இணை இயக்குநா் விஜயா, உதவி ஆணையா் ராஜா, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் நித்தியானந்தம், ராஜலட்சுமி, நகா்மன்ற உறுப்பினா்கள் லோகேஸ்வரி, சரத்பாபு, டி.கோபால் அசோகன், கமல விநாயகா் கோயில் செயல் அலுவலா் பிரகாஷ், கமல விநாயகா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஏழுமலை, மத்திய ஒன்றிய திமுக செயலாளா் பூா்ணசந்தா், காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளா் ராஜா, தொழிலதிபா் கோவிந்தன், கமல விநாயகா் அலுவலக உதவியாளா் நடராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com