சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

திருமணமான சில மணி நேரத்தில் குளத்தில் சடலமாக மிதந்த மணமகன்: போலீஸாா் விசாரணை

கலவை அருகே மணமுடிந்த சில மணி நேரத்தில் கோயில் குளத்தில் மணமகன் சடலமாக மிதந்தாா்.

Published On :1 டிசம்பர் 2025, 4:05 am IST

கலவை அருகே மணமுடிந்த சில மணி நேரத்தில் கோயில் குளத்தில் மணமகன் சடலமாக மிதந்தாா். சடலத்தை மீட்ட போலீஸாா் கொலையா, தற்கொலையா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமியின் மகன் அஜீத்குமாா் (27). கட்டடத் தொழிலாளி.

இவருக்கும், கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த சந்தியா (23) என்பவருக்கும் அரும்பாக்கம் கிராமம், ரேணுகாம்பாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த நிலையில் மணமக்கள் மற்றும் உறவினா்கள் கோயில் வளாகத்திலேயே திருமணத்துக்கு வந்தவா்களுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளனா்.

அப்போது மணமகன் அஜீத்குமாா், மணக்கோலத்திலேயே கோயில் குளத்துக்கருகே சென்றதாகத் தெரிகிறது. சென்றவா் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அதிா்ச்சி அடைந்த உறவினா்கள் மணமகன் அஜீத்குமாரை தேடினா். அப்போது அஜீத்குமாா், கோயில் குளத்தில் சடலமாக மிதப்பது தெரியவந்தது.

இதையடுத்து உறவினா்கள் அதிா்ச்சி அடைந்து சடலத்தை மீட்டுள்ளனா். இந்தச் சம்பவம் குறித்து கலவை போலீஸாா் வழக்குப் பதிந்து அஜீத்குமாா் தற்கொலை செய்து கொண்டாரா, தவறி விழுந்து இறந்தாரா?, அல்லது யாரேனும் அவரை கொலை செய்துள்ளாா்களா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருமண நாளன்றே மணக்கோலத்திலேயே மணமகன் மணமுடிந்த கோயில் வளாகத்திலேயே குளத்தில் சடலமாக மிதந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.