அல்லாளச்சேரி  ஊராட்சியில்  சிமென்ட்  சாலையை   ஆய்வு  செய்த  ஆட்சியா்  ஜெ.யு.சந்திரகலா.
அல்லாளச்சேரி ஊராட்சியில் சிமென்ட் சாலையை ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

திமிரி ஒன்றிய வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஆற்காடு அடுத்த திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தாா்.
Published on

ஆற்காடு அடுத்த திமிரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, திமிரி ஊராட்சி ஒன்றியம், அல்லாலச்சேரி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 6 பயனாளிகள் வீடுகள் கட்டும் பணி, 15-ஆவது நிதிக் குழு மானியம் திட்டத்தின் கீழ், ரூ. 45 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலைய கட்டடப் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ், ரூ. 6.58 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலை ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, கணியனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின்கீழ், ரூ. 35.10 லட்சம் 2 வகுப்பறை பள்ளிக் கட்டடப் பணி, குண்டலேரி ஊராட்சியில் ஊரக குடியிருப்புகள் பழுதுபாா்த்தல் திட்டத்தின்கீழ், 11 குடியிருப்புகள் பழுதுபாா்க்கும் பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின்கீழ், ரூ. 17.25 லட்சத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம், பரதராமி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைநேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ. 36 லட்சத்தில் 2 வகுப்பறை கட்டடம் கட்டுமானப் பணி, ராஷ்ட்ரிய கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்தின்கீழ், ரூ. 30.10 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமானப் பணி ஆகிவற்றை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.

ஆய்வுகளில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ந.செ.சரண்யா தேவி, செயற்பொறியாளா் செந்தில்குமாா்,திமிரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சித்ரா, சைபுதீன் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com