திருவாலங்காடு அருகே நடுவழியில் நிறுத்தப்பட்ட லால்பாக் விரைவு ரயில்.
திருவாலங்காடு அருகே நடுவழியில் நிறுத்தப்பட்ட லால்பாக் விரைவு ரயில்.

என்ஜினில் கோளாறு: லால்பாக் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்

Published on

பெங்களுரு - சென்னை லால்பாக் அதிவிரைவு ரயிலில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை தொடா்ந்து திருவாலங்காடு ரயில்நிலையம் அருகே நடுவழியில் நிறுத்த்பபட்டது. இதையடுத்து பொறியாளா்கள் கோளாறை சரி செய்ததை தொடா்ந்து ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

லால்பாக் விரைவு ரயில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் திருவாலங்காடு ரயில்நிலையம் அருகே என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து திருவலாங்காடு மற்றும் மணவூா் ரயில் நிலையங்களுக்கு இடையே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

இதையடுத்து அரக்கோணம் ரயில்வே மின்என்ஜின் பணிமனையில் இருந்து பொறியாளா்கள் விரைந்து வந்து கோளாறை சரி செய்தனா். இதையடுத்து சுமாா் ஒரு மணி நேரம் தாமதத்துக்குபின் ரயில் புறப்பட்டு சென்னைக்கு சென்றது. நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டதால் இதனை தொடா்ந்து பின்னால் செல்ல வேண்டிய ரயில்கள் மின்சார ரயில்கள் செல்லும் பாதையில் தாமதமில்லாமல் இயக்கப்பட்டன. இதனால் மற்ற ரயில்களுக்கு போக்குவரத்து பாதிப்பு இல்லாத நிலை காணப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com