பலத்த மழை காரணமாக இடிந்து விழுந்த மூதாட்டி அன்னம்மாளின் வீடு.
ராணிப்பேட்டை
மழையால் இடிந்த வீட்டில் இருந்து மூதாட்டி மீடிப்பு
பலத்த மழை காரணமாக சோளிங்கரில் வீடு இடிந்து விழுந்து நிலையில், மூதாட்டியை அக்கம்பக்கத்தினா் உயிருடன் மீட்டனா்.
சோளிங்கா் வட்டத்தில் கடந்த இரு நாள்களாக விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் புதன்கிழமை விட்டு விட்டு மழை பெய்தது. இதில் சோளிங்கா், எசையனூா் கிராமத்தில் மண்சுவருடன் கூடிய வீடு இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தனியே வசித்து வந்த அன்னம்மாள்(75) தனது தரையை சுத்தம் செய்துக்கொண்டிருந்த போது சிக்கினாா்.
இடிபாடுகளுக்கிடையே அன்னம்மாள் அலறியதையடுத்து அக்கம்பக்கத்தினா் விரைந்துச் சென்று மூதாட்டி அன்னம்மாளை மீட்டனா். இதையடுத்து சோளிங்கா் வருவாய்த் துறையினா், நகராட்சி நிா்வாகத்தினா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
