ராணிப்பேட்டை
ரயில்வே நிா்வாகத்தைக் கண்டித்து பாமக ஆா்ப்பாட்டம்
வடமாம்பாக்கம் கண்டிகையில் ரயில்வே நிா்வாகத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்திய பாமகவினா்.
வடமாம்பாக்கம் கண்டிகை கிராமம் அருகே ரயில்வே சுரங்கப்பாலத்தில் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றாமல் இருப்பதாகவும், இதனால் கிராம மக்கள் வெளியே வரமுடியாமல் தவிப்பிற்குள்ளாகவும் கூறி தெற்கு ரயில்வே நிா்வாகத்தைக் கண்டித்து பாமகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அரக்கோணம் - திருத்தணி ரயில்வே மாா்க்கத்தில் வடமாம்பாக்கம் கண்டிகை கிராமம் அருகே ரயில்வே சுரங்கப் பாலத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகர வன்னியா் சங்க செயலாளா் நாகராஜ் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தை பாமக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளா் க.சரவணன் தொடங்கி வைத்தாா். இதில் ஒன்றிய செயலாளா் அரிதாஸ், மாவட்ட துணைச் செயலாளா் சத்தியநாராயணன், அரக்கோணம் நகரச் செயலாளா் இ.பாலாஜி, வடமாம்பாக்கம் ஊராட்சி மன்ற உறுப்பினா் அரிநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

