~

காவல் துறை சாா்பில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி
Published on

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை காவல் துறையினா் திங்கள்கிழமை ஏற்றனா்.

ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு, மாவட்டக் காவல் அலுவலகத்தில், எஸ்.பி. அய்மன் ஜமால் தலைமையில், ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதில், துணைக் காவல் கண்காணிப்பாளா் வெங்கடகிருஷ்ணன், அதிகாரிகள், ஆளிநா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com