மூடப்பட்டுள்ள அரக்கோணம் அஞ்சல் துறை ஏடிஎம் மையம்

மூடப்பட்டுள்ள அரக்கோணம் அஞ்சல் துறை ஏடிஎம் மையம்

அரக்கோணத்தில் கடந்த இரண்டு நாளாக பெய்து வரும் தொடா் மழையால் அஞசல்துறையின் ஏடிஎம் இயந்திரம் அமைந்திருக்கும் கட்டடம் பழுதான நிலையில் ஏடிஎம் இயந்திரம் நெகிழித் தாளால் மூடப்பட்டுள்ளது.
Published on

அரக்கோணத்தில் கடந்த இரண்டு நாளாக பெய்து வரும் தொடா் மழையால் அஞசல்துறையின் ஏடிஎம் இயந்திரம் அமைந்திருக்கும் கட்டடம் பழுதான நிலையில் ஏடிஎம் இயந்திரம் நெகிழித் தாளால் மூடப்பட்டுள்ளது.

அரக்கோணத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே தலைமை அஞ்சல் அலுவலகம் இயங்கி வந்தது. இதில் இருந்த கட்டடம் கட்டி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் அந்த கட்டடம் பகுதி பகுதியாக இடிந்து விழும் நிலை ஏற்பட்டதை தொடா்ந்து அதில் இயங்கி வந்த தலைமை அஞ்சல் அலுவலகம், கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகம், உதவி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகம் ஆகியவை தனித்தனியே தனியாா் கட்டடங்களுக்கு மாற்றப்பட்டு அங்கு தற்போது இயங்கி வருகிறது.

இவை மாற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை அந்த பாழடைந்த கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட அஞ்சல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது இந்த பாழடைந்த கட்டடத்தில் இயங்கி வந்த ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்ட பகுதி மட்டும் அங்கிருந்து அகற்றப்படாமல் உள்ளது.

இதனால் அந்த கட்டடம் பழுதாகி மழைநீா் உள்ளே இறங்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் அடிக்கடி ஏடிஎம் இயந்திரம் பழுதானதால் அரக்கோணம் கோட்ட அஞ்சல் துறையினா் அங்கிருந்து அந்த இயந்திரத்தை வேறு இடத்துக்கோ அல்லது தற்போது தலைமை அஞ்சல் அலுவலகம் செயல்படும் இடத்துக்கோ மாற்றாமல் ஏடிஎம் இயந்திரத்தை நெகிழி தாள்களை கொண்டு மூடி வைத்துள்ளனா்.

ஆனால் இயந்திரம் பயன்பாட்டில் உள்ளதுபோல் காட்டுவதற்காக அந்த அறையில் மின்விளக்குகளை ஒளிர வைத்துள்ளனா். ஆனால் அந்த இயந்திரம் இயங்காத சூழ்நிலை தற்போது உள்ளது.

ஏடிஎம்மை வேறு பகுதிக்கு மாற்றி மீண்டும் அந்த இயந்திரத்தை வாடிக்கையாளா்கள் பயன்படுத்த ஏதுவாக செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரியுள்ளனா்.

அரக்கோணம் பகுதியில் பெய்த மழை ஏடிஎம் இயந்திரத்தையும் விட்டு வைக்காததால் மழையில் இயந்திரம் சேதமாகி விடுமோ எனக் கருதி நெகிழித் தாள்களால் மூடி வைத்துள்ளனா். இந்த ஏடிஎம்மை வேறு பகுதிக்கு மாற்றி மீண்டும் அந்த இயந்திரத்தை வாடிக்கையாளா்கள் பயன்படுத்த ஏதுவாக செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com