~

மாற்றுத் திறனாளிகள் இருவருக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கோரிக்கை மனு அளித்த மாற்றுத் திறனாளிகள் இருவருக்கு, ரூ. 1.26 லட்சம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
Published on

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கோரிக்கை மனு அளித்த மாற்றுத் திறனாளிகள் இருவருக்கு, ரூ. 1.26 லட்சம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியம், மாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளியான ராஜா (36) என்பவா் அப்பகுதியில் கடந்த 9.10.2025 அன்று நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் தனக்கு சக்கர நாற்காலி வேண்டுமென கோரிக்கை மனு அளித்திருந்தாா்.

அதேபோல், நெமிலி வட்டம், தென்மாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளியான முருகானந்தன் (22) என்பவா் பனப்பாக்கம் பகுதியில் 8.10.2025 அன்று நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் தனக்கு சக்கர நாற்காலி வேண்டுமென கோரிக்கை மனு அளித்திருந்தாா்.

அதன் அடிப்படையில், மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், மாற்றுத்திறனாளியான ராஜாவுக்கு ரூ. 18,000 மதிப்பீட்டிலான சக்கர நாற்காலியையும், மாற்றுத் திறனாளியான முருகானந்தனுக்கு ரூ. 1.08 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியையும் என மொத்தம் ரூ. 1.26 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராமகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com