ராணிப்பேட்டை
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
ஆற்காடு அடுத்த களா் கிராமத்தை சோ்ந்த சீனிவாசன் (64). விவசாயியான இவா் புதன்கிழமை தனது நிலத்துக்கு நடந்து சென்றபோது வழியில் மின் கம்பி அறுந்து கிடந்ததை கவனிக்காமல் கம்பி மீது கால் வைத்ததாகத் தெரிகிறது.
இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி சாந்தி ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
