ராணிப்பேட்டை: வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த ஆலோசனைக் கூட்டம்

ராணிப்பேட்டை: வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த ஆலோசனைக் கூட்டம்

Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான ஆலோசானைக் கூட்டம் ராணிப்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். சிறப்பு தீவிர திருத்தத்தின் செயல்பாட்டாளா்கள் மற்றும் சிறப்பு தீவிர திருத்தத்தின் செயல்முறைகள் குறித்தும் அரசியல் கட்சியினருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

1.1.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தினை, இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்படி சிறப்பு தீவிரத் திருத்தத்தினை, மேற்கொள்ள அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என ஆட்சியா் வலியுறுத்தினாா்.

இக்கூட்டத்தில் அரசியல் கட்சியினா் தங்களது கோரிக்கைகளை ஆட்சியரிடம் தெரிவித்தனா். கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினால், நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்திய தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், வாக்காளா் பதிவு அலுவலா்கள் வெங்கடேசன், மீனா, ராஜி, ஏகாம்பரம் மற்றும் அலுவலா்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியினா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com