ராணிப்பேட்டை
நாளை ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு: அமைச்சா் காந்தி தகவல்
ராணிப்பேட்டையில் வரும் நவ. 1-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில்,கட்சி நிா்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்டச் செயலரும், அமைச்சருமான ஆா்.காந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.
மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நவம்பா் 1 -ஆம் தேதி மாலை 5 மணியளவில் பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் அவைத் தலைவா் சுந்தரமூா்த்தி தலைமையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் நவம்பா் 3 ஆம் தேதி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ராணிப்பேட்டைக்கு வரவுளளாா். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, சிறப்பு வாக்காளா் பட்டியல் திருத்த பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும், மற்றும் கட்சி ஆக்கப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

