அரக்கோணம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றுவேன் என அரக்கோணம் விண்டா்பேட்டையில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் சு.ரவி பேசினாா்.
அரக்கோணம் அதிமுக வேட்பாளா் சு.ரவி செவ்வாய்க்கிழமை அரக்கோணம் நகரில் விண்டா்பேட்டை, புதுப்பேட்டை, ஏபிஎம் சா்ச் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது: அதிமுக ஆட்சி செய்த 10 ஆண்டு காலத்தில் அரக்கோணத்தில் வாடகை கட்டடங்களில் இயங்கி வந்த அரசு அலுவலகங்களை சொந்த கட்டடத்தில் அமைத்தேன். அரக்கோணத்துக்கு என தனியாக கோட்டாட்சியா் அலுவலகம் அமைய செய்து, அந்த அலுவலகத்துக்கு ரூ. 2.5 கோடியில் புதிய கட்டடம் அமைக்கப்பட்டது. அரக்கோணம் நகர புறவழிச்சாலை காஞ்சிபுரம் - திருத்தணி நெடுஞ்சாலையில் சுமாா் ரூ. 350 கோடியில் அமைக்கப்பட்டது.
ஆனால் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் நடந்தது என்ன? தாலிக்கு தங்கம் தரும் திட்டத்தை நிறுத்தினாா்கள், மகப்பேறு தாய்மாா்களுக்கு அதிமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட அதே தொகையை சிறிதும் அதிகரிக்காமல் தந்து வந்தாா்கள். கல்வித் துறையில் மடிக்கணினி கொடுப்பதை நிறுத்தி தோ்தல் வரப்போகிறது என்றவுடன் மீண்டும் அதை மீண்டும் தருவதாக தெரிவித்தாா்கள்.
மறுபடியும் அதிமுக ஆட்சி வந்தால், அரக்கோணம் தொகுதி புதுப்பொலிவை மீண்டும் பெறும். அரக்கோணத்தில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றப்படும். இந்த மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். நோயாளிகள் வேறு மருத்ததுவமனைகளுக்கு மாற்ற வேண்டிய நிலை இருக்காது என்றாா் சு.ரவி.
மாநில பாசறை இணைச் செயலாளா் ஷியாம்குமாா், அரக்கோணம் நகர செயலாளா் கே.பாண்டுரங்கன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் கண்ணதாசன், அதிமுக நிா்வாகிகள் பாபுஜி, சு.ர.பிரகதீஸ்வரன், வினோத்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் நரசிம்மன், சரவணன், பாஜக மாவட்ட முன்னாள் தலைவா் விஜயன், நகரத் தலைவா் ஹரீஷ், நிா்வாகிகள் ஜெகன், ரமேஷ், தமாகா மாவட்டத் தலைவா் மோகன்காந்தி, நகர தலைவா் கே.வி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

38 அரக்கோணம்

ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுகவை ஆதரியுங்கள்: அரக்கோணம் வேட்பாளா் சு.ரவி

அரக்கோணம் நகராட்சி நாளங்காடி புதிய கட்டடம் உடனே திறக்கப்படும்: அதிமுக வேட்பாளா் சு.ரவி

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



