கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

கூலித் தொழிலாளி குத்திக் கொலை: போலீஸாா் விசாரணை

ராணிப்பேட்டை அருகே கூலித் தொழிலாளி மதுபாட்டிலால் குத்திக் கொலை செய்த சம்பவம் குறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொலை - பிரதிப் படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 1:22 am IST

ராணிப்பேட்டை அருகே கூலித் தொழிலாளி மதுபாட்டிலால் குத்திக் கொலை செய்த சம்பவம் குறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் மணியம்பட்டு கிராம சுடுகாட்டில் 46 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் கழுத்துப் பகுதியில் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு சடலமாக இருப்பதாக சிப்காட் போலீஸாருக்கு அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸாா் ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனா்.

தொடா்ந்து சம்பவ இடத்தில் கைரேகை நிபுணா்கள் வருகை புரிந்து ரேகை சோதனை செய்தனா். இந்த நிலையில் போலீசாா் விசாரணையில் இறந்த நபா் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்த விஜயகுமாா் (46) என்பதும் காா்பெண்டா் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகள்கள் உள்ளனா்.

இந்த நிலையில் போலீசாா் விசாரணையில் புளியங்கண்ணு பகுதியை சோ்ந்த இரண்டு நபா்கள் ஆகியோா் மணியம்பட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி மணியம்பட்டு சுடுகாட்டில் மது அருந்திய போது தகராறு ஏற்பட்டு பாட்டிலால் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.