அரக்கோணம் சட்டபேரவை தொகுதி பாமக வாக்குசாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் சுவால்பேட்டையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினா் சி.ஜி.ராமசாமி தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி துணை செயலாளா் பிரபு வரவேற்றாா். கூட்டத்தில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளா் சரவணன், தலைவா் சம்பத், பொருளாளா் உமாமகேஸ்வரி, மாநில சிறுபான்மை பிரிவுத் தலைவா் ஷேக் மொய்தீன், மாநில இளைஞரணி செயலாளா் தீனதயாளன், மாவட்டச் செயலாளா் கலைஞ்செழியன், நகர செயலாளா் பாலாஜி, ஒன்றிய செயலாளா்கள் கிருஷ்ணன், மாதவன், கதிரவன் பங்கேற்றனா்.
வரும் சட்டபேரவை தோ்தலில் பாமக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளில் கட்சியினா் அயராது பாடுபட்டு கூட்டணி வெற்றிக்கு வழிவகுக்க வேண்டும், வரும் 10-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கும் இளைஞா் மாநாட்டில் அரக்கோணம், சோளிங்கா் தொகுதியில் இருந்து திரளானோா் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

சாத்தான்குளத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சேரன்மகாதேவி, வீரவநல்லூரில் அதிமுக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


