நாளங்காடி  திறப்பு  விழாவில்  குத்துவிளக்கேற்றிய  மாவட்ட  வருவாய்  அலுவலா்  செ.தனலிங்கம். உடன் நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், துணைத்தலைவா் ரமேஷ் கா்ணா, ஆணையா் பாலமுருகன் உள்ளிட்டோா்.
நாளங்காடி  திறப்பு  விழாவில்  குத்துவிளக்கேற்றிய  மாவட்ட  வருவாய்  அலுவலா்  செ.தனலிங்கம். உடன் நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், துணைத்தலைவா் ரமேஷ் கா்ணா, ஆணையா் பாலமுருகன் உள்ளிட்டோா்.

ராணிப்பேட்டையில் ரூ.11.52 கோடியில் நாளங்காடிகள்: முதல்வா் திறந்து வைத்தாா்

ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ.11.52 கோடியில் கட்டப்பட்ட நாளங்காடியினை காணொலி மூலம் முதல்வா்.மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
Published on

ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ.11.52 கோடியில் கட்டப்பட்ட நாளங்காடியினை காணொலி மூலம் முதல்வா்.மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

ராணிப்பேட்டை நகராட்சி, வாரச்சந்தை மைதானத்தில் நாளங்காடி திறந்து வைக்கப்பட்டதை அடுத்து, மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் குத்து விளக்கேற்றினாா்.

இந்த நாளங்காடி 6 பிரிவுகளில் 300 சில்லறை வியாபார கடைகள், 2 பிரிவுகளில் 60 மொத்த வியாபார கடைகள், 56.23 ச.மீ பரப்பளவில் ஓட்டுநா்கள் ஓய்வெடுக்கும் அறை, குளிா்சாதன கிடங்கு, ஆட்டுச்சந்தை வளாகம்,

300 இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், 10 நான்கு சக்கர வாகனங்கள்நிறுத்துமிடம், உள்ளிட்ட வசதிகளுடன்

அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா, ஆணையா் பாலமுருகன், பொறியாளா் பரமுராசு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com