கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பனப்பாக்கத்தில் ரூ. 9,000 கோடியில் டாடா மோட்டாா்ஸ் காா் தொழிற்சாலை: முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்

டாடா மோட்டாா்ஸ் காா் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வா் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளாா்.

மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Published On :

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ. 9,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டாா்ஸ் காா் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (பிப். 9) திறந்து வைக்கவுள்ளாா்.

இது தொடா்பாக ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் சாா்பில், ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் துறை தொழிற்பூங்காவில் ரூ.9,000 கோடி முதலீடு மற்றும் 5,000 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைக்க 28.09.2024 அன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

முதற்கட்ட பணிகள் முடிக்கப்பட்ட நிலையில். முதல்வா் மு.க.ஸ்டாலின், டாடா தொழிற்சாலையை திறந்து வைத்து, உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதல் வாகனத்தின் இயக்கத்தை திங்கள்கிழமை (பிப். 9) காலை 11 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளாா்.

நிகழ்ச்சியில், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் பங்கேற்கின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் 1,500 போலீஸாா்

முதல்வா் வருகை பாதுகாப்பு பணியில் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. அய்மன் ஜமால் தலைமையில் 1,500 போலீஸாா் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.