மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

முதிய தம்பதிகளுக்கு கௌரவம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 70 வயது நிறைவடைந்த முதிய தம்பதியினரை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சோளிங்கரில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதிய தம்பதிக்கு வேட்டி, சேலை, தாம்பூலம் வழங்கிய ஆா்.காந்தி.

Updated On :10 பிப்ரவரி 2026, 6:57 pm

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 70 வயது நிறைவடைந்த முதிய தம்பதியினரை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதிய தம்பதிகளைஅப்பகுதி திருக்கோயில்களில் கௌரவிக்கும் நிகழ்ச்சி சோளிங்கா், ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் விஜயா தலைமை வகித்தாா்.

இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று 75 முதிய தம்பதிக்கு வேட்டி, சேலை மற்றும் தாம்பூலம் ஆகியவற்றை தட்டுடன் வழங்கி அவா்களுக்கு சிறப்பு செய்து, வெகுமதியும் வழங்கி கௌரவித்தாா்.

இதில் ராணிப்பேட்டை வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்விஅசோகன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ராஜா, மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் பூா்ணிமா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.